

மும்பை
இந்த ஸ்டூடியோவில் சினிமா படப்பிடிப்பிற்காக பிரமாண்ட செட் போடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் செட் அருகே இருந்த மின்வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் பற்றிய தீ மளமளவென அருகில் போடப்பட்டு இருந்த பிரமாண்ட செட்டிற்கு பரவியது.
இதனால் சினிமா செட் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. எனவே அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 4 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்தினால் நெடுஞ்சாலையில் கரும்புகை சூழ்ந்ததால், போலீசாரால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மாற்று வழியில் திருப்பி விட்டப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் அங்கு செட் அமைக்க வைக்கப்பட்டிருந்த மரச்சாமான்கள், திரைச்சீலைகள் உள்பட பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.