மீட்புப்பணியில் காயம் அடைந்தும் 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

மீட்புப்பணியில் காயம் அடைந்தும் 11 பேரை தீயணைப்பு வீரர் ஒருவர் காப்பாற்றினார்.
மீட்புப்பணியில் காயம் அடைந்தும் 11 பேரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் தீப்பிடித்த கட்டிடத்துக்குள், ராஜேஷ் சுக்லா என்ற தீயணைப்பு வீரர் முதல் நபராக நுழைந்தார். மீட்புப்பணியில் அவரது கால்களில் காயம் ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல், அவர் ஒருவரே 11 பேரை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார்.

பின்னர், டெல்லி லோக்நாயக் ஜெயப் பிரகாஷ் நாராயணன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டெல்லி உள்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் நேரில் சந்தித்தார்.

பிறகு தனது டுவிட்டர் பக்கத்தில், தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா, உண்மையான கதாநாயகன். காயத்தை பொருட்படுத்தாமல், கடைசிவரை பணியாற்றி உள்ளார். இந்த துணிச்சலான வீரருக்கு வணக்கம் என்று சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com