

கொச்சி
ஆசியாவிலேயே முதல் முறையாக ரோசா எனும் பெயருடைய மருத்துவ ரோபோவைக் கொண்டு மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூளையை அமைதிப்படுத்தும் கருவியை பொருத்தியுள்ளனர். மனிதக் கரங்களால் துல்லியமாக செய்ய முடியாத இந்த வகையான அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர். அறுவை சிகிச்சை பெற்றுக்கொண்ட மனிதர் சுபைர் பர்கின்சன்ஸ் எனப்படும் நோயால் அவதிப்பட்டு வந்தார்.
இது பற்றி நரம்பியல் மருத்துவரான அசோக் பிள்ளை இப்போது சுபைர் மற்றவர்கள் போல் சாதாரணமாக வாழ்ந்து வருகிறார். அவரின் பொருளாதார நிலைமையைக் கருதி அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது என்றார். சுபைருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை 1987 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பர்கின்சன்ஸ், வலிப்பு, கடுமையான வலி மற்றும் உடலியக்க குறைபாடு போன்ற கடுமையான எளிதல் குணப்படுத்த இயலாத நோய்களுக்கு இம்முறை பலனளிக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பயன்பட்ட ரோசா எனும் ரோபோ மண்டையோட்டினுள் செலுத்தப்பட்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கானது. இதன் மூலம் மூளையில் அமைதிப்படுத்தும் கருவி துல்லியமாக பொருத்தப்படுகிறது.