11 ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகு முதல் தீபாவளிப் பரிசு: நெகிழ்ச்சியில் லாரி ஓட்டுநர்!

கடின உழைப்பாளிகளான ஓட்டுநர்களின் உழைப்பை மதித்து அங்கீகரித்த நிறுவனத்திற்கு பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
11 ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகு முதல் தீபாவளிப் பரிசு: நெகிழ்ச்சியில் லாரி ஓட்டுநர்!
சுரேஷ் மவுரியா
Published on: 

காந்தி நகர்,

ஒரே நிறுவனத்தில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு, அவரது வாழ்நாளில் முதல்முறையாக தீபாவளிப் பரிசு வழங்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது.

11 ஆண்டுகால நேர்மையான உழைப்பு

குஜராத் மாநிலம் வாபி நகரில் செயல்பட்டு வரும் 'பஜ்ரானி ஸ்டார் லாஜிஸ்டிக்ஸ்' என்ற நிறுவனத்தில் சுரேஷ் மவுரியா என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் 2026-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அந்நிறுவனத்தின் நிர்வாகம் அவரது உழைப்பைப் பாராட்டி சிறப்புப் பரிசுகளை வழங்கி கவுரவித்தது.

பரிசுத் தொகுப்பில் இருந்தவை என்ன?

நிறுவனத்தின் சார்பில் அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பில் ரூ. 1,000 ரொக்கப் பணம், புதிய சட்டை மற்றும் டிரவுசர், மில்டன் டிபன் பாக்ஸ், தண்ணீர் பாத்திரம் மற்றும் ஒரு கிலோ கஜூ கட்லி இனிப்புப் பெட்டி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

ஓட்டுநரின் நெகிழ்ச்சியான வார்த்தைகள்

தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஒவ்வொன்றாக பிரித்துக் காட்டிய சுரேஷ் மவுரியா, "என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக எனக்கு இப்படி ஒரு தீபாவளிப் பரிசு கிடைத்திருக்கிறது" என்று மிகுந்த மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

கடந்த நவம்பர் 9-ம் தேதி சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ, லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. கடின உழைப்பாளிகளான ஓட்டுநர்களின் உழைப்பை மதித்து அங்கீகரித்த நிறுவனத்திற்கு பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

X