மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
Published on

புதுடெல்லி,

தி.மு.க. கட்சி அலுவலகம் டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. அண்ணா - கலைஞர் அறிவாலயம் என்று பெயரிடப்பட்டு உள்ள அந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 2-ம் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது.

தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com