அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு

அந்தமானில் அதிக இயற்கை எரிவாயு வளம் உள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு
Published on

போர்ட் பிளேர்,

அந்தமான் தீவின் கடல் படுகையில் முதல் முறையாக இயற்கை எரிவாயுவின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) தெரிவித்துள்ளது. அந்தமான் கடற்கரை தொகுதியான AN-OSHP-2018/1-ல் ஆய்வு கிணறு தோண்டப்பட்டபோது இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.

முதற்கட்ட மதிப்பீடுகளின்டி, சம்பந்தப்பட்ட இடத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் என்றும், இந்த கண்டுபிடிப்பு எதிர்கால ஆய்வுகளுக்கு உதவக்கூடும் என்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் கூடுதல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று குறிப்பிட்டுள்ள மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி, அந்தமான் கடல் பகுதியில் அதிக இயற்கை எரிவாயு வளம் உள்ளது என்ற நீண்ட நாள் நம்பிக்கையை இது உறுதிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com