மீனவர் விவகாரம்: வெளியுறவு மந்திரிக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

தமிழக மீனவர் விவகாரம் தொடர்பாக வெளியுறவு மந்திரிக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
தி.மு.க. எம்.பி. கனிமொழி, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு நேற்று எழுதிய ஒரு கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கை கடற்படையினர் அடிக்கடி நமது மீனவர்களை கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வருவது உங்களுக்கு தெரியும். சமீபத்தில் கடந்த 6-ந் தேதி, தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 மாதங்களில் இது 9-வது சம்பவம். இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 107 மீனவர்களும், 227 மீன்பிடி படகுகளும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளன. எனவே, இந்த பிரச்சினைகள் குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் வந்து உங்களிடம் விரிவாக பேச ஒரு சந்திப்பை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story






