பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் பலி

இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் பலி
Published on

சிம்லா,

இமாச்சலபிரதேச மாநிலம் சம்பா மாவட்டம் கீரா கிராமத்தை சேர்ந்தவர் ரிபன் சிங் (வயது 30). இவரது மனைவி ரிம்பி தேவி. இந்த தம்பதிக்கு 3 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்தது.

இதனிடையே, கடந்த திங்கட்கிழமை இரவு குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காரில் பதான்கோட் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். காரில் ரிபன் சிங், அவரது மனைவி ரிம்பி தேவி, ரிபன் சிங்கின் தந்தை வச்சன் சிங் (வயது 60) உறவுக்காரப்பெண் கீர்த்தி (வயது 23) மற்றும் பச்சிளம் குழந்தை என 5 பேர் பயணம் செய்துள்ளனர்.

கார் விபத்து - 5 பேர் பலி

பர்முர் - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த பச்சிளம் குழந்தை உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com