உ.பி.: அலிகாரில் பஸ் லாரி மோதி விபத்து - 5 பேர் பலி

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உ.பி.: அலிகாரில் பஸ் லாரி மோதி விபத்து - 5 பேர் பலி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள யமுனா விரைவு சாலையில் வந்த லாரியும் எதிரே வந்த தனியார் பஸ்சும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலிகார் மாவட்ட போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் மாவட்டத்தின் தப்பல் பகுதி வழியாக வாகனங்கள் சென்றபோது நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com