தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி

தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் பொருட்டு, 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க 5 தீவிரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் மிகப்பெரிய அளவில் நாச வேலையில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கும் தகவல், அவர்களது உரையாடல்களை இடைமறித்துக் கேட்டதன் மூலம் தெரிய வந்திருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை நிகழ்த்துவதற்காக நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சிப்பதாகவும், கடைசியாக இருநாட்டு எல்லைக்கு அருகே கோராக்பூர் என்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் 5 தீவிரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி வந்து சேர்ந்த பிறகு காஷ்மீரில் உள்ள தீவிரவாத ஆதரவாளர்களை வரவழைத்து திட்டத்தை செயல்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com