உ.பி: பைக் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; 5 பேர் பலி

பைக் மீது டேங்கர் லாரி மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி: பைக் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; 5 பேர் பலி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள சராய் மம்ராஜ் பகுதியில் பைக் மீது டேங்கர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். சோரோ பெட்ரோல் பம்ப் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்கள் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள மீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த விகாஸ் (வயது 25), சும்மாரி (வயது 60), ஜனதா (வயது 34),  திவானா (வயது 7) மற்றும் லக்ஷ்மி (8 மாதங்கள்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  விபத்தில் பலியான 5 பேரும் ஒரே பைக்கில் பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com