ஜார்க்கண்ட்: சாலையோர மரத்தின்மீது கார் மோதி கோர விபத்து - 5 பேர் பலி

விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்
ஜார்க்கண்ட்: சாலையோர மரத்தின்மீது கார் மோதி கோர விபத்து -  5 பேர் பலி
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து சிம்டிகா மாவட்டத்திற்கு நேற்று மதியம் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பயணித்தனர்.

விபத்து

இந்நிலையில், சிம்டிகா மாவட்டம் அஹ்ரமா கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com