லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 5 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 5 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளிட்ட 266 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அவர்களின் உடலில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிவதற்காக, அந்த 5 பேரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அந்த 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com