5 மாநில தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும்- தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம்

தலைமை தேர்தல் கமிஷனருக்கு தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி சார்பில் அதன் தலைவர் கே. ஜெகதீஸ்வர ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
கோப்பு படம் (பிடிஐ)
கோப்பு படம் (பிடிஐ)
Published on

புதுடெல்லி,

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. எந்நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கிடையில், நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினைகள் தொடர்பாக தேர்தல் தற்போது நடத்தப்பட வாய்ப்பு இல்லை எனவும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்துவதில் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில், 5 மாநில தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி சார்பில் அதன் தலைவர் கே. ஜெகதீஸ்வர ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், புவிசார் அரசியல் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு கவலைகள், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் போன்றவை உறுதியற்ற தன்மையை அதிகரித்துள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது

இத்தகைய சூழலில் பெரிய அளவிலான தேர்தல்களை நடத்துவது வாக்காளர்கள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை தேவையற்ற ஆபத்துகளுக்கு உள்ளாக்கக்கூடும் என்றும், எனவே தேர்தலை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com