சுதந்திர தினத்தையொட்டி அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்

வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலம்
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது.

இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த எல்லை பகுதியில் இரு நாடுகளில் படைகளும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும்.

இந்நிலையில், இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியா -பாகிஸ்தான் வாகா எல்லையில் தேசியக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகழித்தனர்.ஜெய்ஹிந்த என்ற முழக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு மக்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com