அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு
Published on

சண்டிகர்,

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அட்டாரி பகுதி அமைந்துள்ளது. அதே போல் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இந்திய எல்லை அருகே வாகா பகுதி அமைந்துள்ளது. இந்த அட்டாரி-வாகா எல்லையில் இருநாட்டு 'பின்வாங்கு முரசறை' (Beating the Retreat) என்று அழைக்கப்படும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்த கொடியிறக்க நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். இதில் இந்திய பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த வீரர்களும் பங்கேற்பார்கள்.

இந்நிலையில், இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் தேசியக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்புடன் நடைபெற்ற கொடியிறக்கும் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். அவர்கள் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில், ஜெய்ஹிந்த, வந்தே மாதரம் என முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com