அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு... மிடுக்குடன் வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்..!

உலக அளவில் மிகவும் பிரபலமான அட்டாரி-வாகா எல்லையில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் தேசிய கொடியை இறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு... மிடுக்குடன் வீறுநடை போட்ட இந்திய வீரர்கள்..!
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது.

இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த எல்லை பகுதியில் இரு நாடுகளில் படைகளும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும்.

இந்நிலையில், 75-வது சுதந்திர தினமான இன்று இந்திய வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகழித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீறுநடை போட்டுச்சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர். ஜெய்ஹிந்த என்ற முழக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு மக்கள் உற்சாக குரல் எழுப்புபினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com