2.30 லட்சம் காகித படகுகள் மூலம் மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி

பெங்களூரு ஹெப்பகோடியில் 2.30 லட்சம் காகித படகுகள் மூலம் மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது
2.30 லட்சம் காகித படகுகள் மூலம் மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி
Published on

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடியில் உள்ள தனியார் அகாடமி சார்பில் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை உருவாக்கும் முயற்சி நடந்தது. இதில் 1,683 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகள் காகிதத்தில் தேசிய கொடியை வரைந்து அதனை படகு போல வடிவமைத்து பிரமாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். சுமார் ஒரு மணி நேரத்தில் 2.30 லட்சம் காகித படகுகள் மூலம் தேசிய கொடியை மாணவ-மாணவிகள் உருவாக்கினர்.

மாணவ-மாணவிகளின் இந்த முயற்சி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த சாதனையை பாராட்டி எலைட் வேர்ட் ரெக்கார்ட், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகியவை மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி உள்ளன. மேலும் மாணவ-மாணவிகளின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com