

ஸ்ரீநகர்,
பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை டாடா குழுமம் விலைக்கு வாங்கி இயக்கி வருகிறது. நேற்று பிற்பகலில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் ஒரு எலி இருப்பதை கடைசி நேரத்தில் பார்த்தனர்.
இதனால், விமானம் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. எலியை போராடி பிடித்து வெளியேற்றனர். இச்சம்பவம் காரணமாக, சுமார் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.