கவுகாத்தியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் எரிபொருள் குறைவு


கவுகாத்தியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் எரிபொருள் குறைவு
x

திடீரென எரிபொருள் பிரச்சனை ஏற்பட்டதால், விமானம் பெங்களூரில் அவசரமாக தரை இறங்கி உள்ளது.

பெங்களூரு,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து இண்டிகோ விமானம் ஒன்று 170 பயணிகளுடன், சென்னைக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென எரிபொருள் பற்றாக்குறை இருப்பதை விமானி கண்டறிந்தார். விமானத்தை தொடர்ந்து இயக்கினால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்த விமானி, உடனடியாக அருகில் உள்ள விமான நிலையத்தில் விமானத்தை இறக்க முற்பட்டார்.

அதன்படி, விமானி துரிதமுடன் செயல்பட்டு விமானத்தை பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

1 More update

Next Story