பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் - கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி

பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகமாக காணப்படுகிறது.
பீகாரில் 14 மாவட்டங்களில் வெள்ளச் சேதம் அதிகம் - கடந்த சில நாட்களில் மட்டும் 13 பேர் பலி
Published on

பாட்னா,

பீகார் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில வாரங்களாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலத்தில் பாயும் பல ஆறுகளில் அபாய அளவுக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டேடுகிறது.

நேபாளத்தில் உற்பத்தியாகி பீகாரின் வடமாவட்டங்களை கடந்து செல்லும் நதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது. 29 தேசிய, மாநில பேரிடர் அமைப்பை சேர்ந்த குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் இதுவரை, சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமானேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com