திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் புஷ்ப யாகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் புஷ்ப யாகம்
Published on

திருப்பதி,

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கனகாம்பரம் மற்றும் கோடி மல்லி பூக்களால் மகா புஷ்ப யாகம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மகா புஷ்ப யாகம் வருகிற 24-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. தினமும் ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாவதனம், ரக்ஷா பந்தனம், அனுஜ்னா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதில் 3-வது நாளான நேற்று காலையில் சுப்ரபாதம், சஹஸ்ரநாம அர்ச்சனை, குங்கும அர்ச்சனை, ராமாயணம், பாகவதம், மகாபாரத பாரயணம், தர்ப்பணம் மற்றும் புஷ்ப யாகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணை செயல் அலுவலர் கஸ்தூரி பாய், உதவி செயல் அலுவலர் பிரபாகர் ரெட்டி, கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணா ரெட்டி, சேஷகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com