'திருச்சி சிவா இந்தியில் நன்றாக பாடுவார்' நிர்மலா சீதாராமன் பேச்சால் மாநிலங்களவையில் கலகலப்பு

"திருச்சி சிவா அழகாக இந்தி பாடல்கள் பாடுவார்.. ஆனால் இந்தி தெரியாதது போல் பேசுகிறார்" என நிர்மலா சீதாராமன் கூறினார்.
'திருச்சி சிவா இந்தியில் நன்றாக பாடுவார்' நிர்மலா சீதாராமன் பேச்சால் மாநிலங்களவையில் கலகலப்பு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று வக்பு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசினார். இந்த மசோதாவை எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டார். இடையில் அவர், பா.ஜனதாவின் சுலோகமான "சப்கா சாத் சப்கா விகாஸ்" என்பதை சொல்ல முடியாததைப் போல அருகில் இருந்த உறுப்பினரிடம் கேட்டார்.

இதை கவனித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், "திருச்சி சிவா இந்தி பாடலை நன்றாக பாடுவார் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் அவர் 'சப்கா சாத் சப்கா'… என வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறார். இந்தி தெரியாததைப் போல காட்டுகிறார்" என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.

இதற்கு திருச்சி சிவா, "நான் ஆங்கிலத்தில் எழுதி வைத்து பாடுவேன். ஆனால் அதற்கான அர்த்தம் எனக்கு தெரியாது. யாராவது சொன்னால்தான் புரியும்" என்றார். வக்பு மசோதா மீதான சூடான விவாதத்தில் இந்த உரையாடல் அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com