ஆந்திராவில் கொரோனா வைரஸ்க்கு நாட்டு மருந்து; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனா தொற்றுக்கு இலவச நாட்டு மருந்து வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில் கொரோனா வைரஸ்க்கு நாட்டு மருந்து; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
Published on

நெல்லூர்,

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுபடுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த நாட்டு வைத்தியர், பல ஆண்டுகளாக மருந்து வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காலத்தில், இவர் அளித்த மருந்து பயனளித்ததாக ஊர் பொதுமக்கள் தெரிவித்தது முதல், அந்த மருந்தை கூடுதலாக தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறார்.

இந்தச் செய்தி, காட்டுத் தீ போல் பரவிய நிலையில், ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, இலவச மருந்தை வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்ம்பவ இடத்திற்கு வந்த வருவாய் அதிகாரிகள் மருந்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.

கொரோனா தொற்றுக்கு இலவச நாட்டு மருந்து வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com