கொரோனா பணியில் உள்ள ஆம்புலன்சுகளுக்கான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றுங்கள் - மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்

கொரோனா பணியில் உள்ள ஆம்புலன்சுகளுக்கான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றுமாறு மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பணியில் உள்ள ஆம்புலன்சுகளுக்கான வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றுங்கள் - மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியபோது நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை ஆம்புலன்சில் கொண்டு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி மாநில அரசுகள் செயல்படுவதாக கூறி, எர்த் என்கிற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. இதில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சில ஆவணங்களை சமர்ப்பித்தார். இதை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை பின்பற்றுவதும், ஆம்புலன்சுகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதும் அனைத்து மாநில அரசுகளின் கடமை ஆகும் என்று கூறினர்.

அப்போது மனுதாரர் தரப்பில், வழிகாட்டு நெறிமுறையில் ஆம்புலன்சுகளுக்கு கட்டண அம்சம் உள்ளடக்கப்படவில்லை என்றும், தன்னிச்சையாக அதிக கட்டணம் வசூலிப்பதால் அதை சரிசெய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், மாநில அரசு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கும், அனைத்து ஆம்புலன்சுகளும் அந்த கட்டணத்தில் இயங்கும் என்று கூறி மனு மீதான விசாரணையை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com