ஆயுர்வேத சிகிச்சைக்காக ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்தியும் கேரளா வருகிறார்..!

ஆயுர்வேத சிகிச்சைக்காக ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்தியும் கேரளா செல்கிறார்.
ஆயுர்வேத சிகிச்சைக்காக ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்தியும் கேரளா வருகிறார்..!
Published on

திருவனந்தபுரம்,

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரளா வந்த ராகுல் காந்தி பின்னர் மூட்டுவலிக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக மலப்புரம் கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலைக்கு சென்றார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், ராகுல் காந்தியை தொடர்ந்து இன்னும் 2 நாட்களில் பிரியங்கா காந்தியும் சிகிச்சைக்காக கேரளா வர உள்ளார். முன்னதாக அவர் மறைந்த உம்மன் சாண்டியின் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com