மத்தியப்பிரதேச அரசு உடற்கல்வி நிறுவனத்தின் உணவில் விஷமா ?...100 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

மத்தியப்பிரதேச அரசு உடற்கல்வி நிறுவனத்தில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட 100 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப்பிரதேச அரசு உடற்கல்வி நிறுவனத்தின் உணவில் விஷமா ?...100 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

மத்தியப்பிரதேசம்,

மத்தியப்பிரதேசத்தின் குவாலியரில் உள்ளது லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனம். இங்கு ஆண்,பெண் என பல இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு தயாரிக்கப்பட்ட உணவை நேற்று மாணவர்கள் சாப்பிட்டனர். அவர்கள் பனீர் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் திடீரென மாணவர்களின் உடல்நிலை பாதித்துள்ளது.

எனவே, சுமார் 100 மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உணவில் விஷம் கலந்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டது. எனவே உணவை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் போது, நேற்று லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. இதில் மாணவர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்துள்ளது எனக்கூறினர். எனவே நங்கள் உடனடியாக அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளை ஏற்பாடு செய்தோம். அப்போது சுமார் 100 மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களை சோதித்ததில் புட் பாய்சனுக்கான முதல் நிலை அறிகுறிகளுடன் இருந்தனர். இதில் ஒரு மாணவர் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் உணவில் விஷம் கலந்துள்ளதா என ஆய்வுக்கு பின்னரே தெரியவரும், என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com