லிப்ட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-உணவு விற்பனை பிரதிநிதி கைது

அடுக்குமாடி குடியிருப்பில், லிப்ட்டில் சென்றபோது 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உணவு விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டார்.
லிப்ட்டில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை-உணவு விற்பனை பிரதிநிதி கைது
Published on

தலகட்டபுரா:-

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

பெங்களூரு தலகட்டபுரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆன்லைனில் உணவு பதிவு செய்தனர். அதன்படி அந்த நிறுவனத்தை சேர்ந்த உணவு விற்பனை பிரதிநிதியான சேத்தன் (வயது 30) என்பவர், உணவை எடுத்து கொண்டு குடியிருப்புக்கு வந்தார். அவர் குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்து 3-வது தளத்திற்கு லிப்ட் மூலம் சென்றார்.

அப்போது அந்த லிப்ட்டில் அதே குடியிருப்பை சேர்ந்த 10 வயது சிறுமியும் சென்றாள். இந்த நிலையில் லிப்ட்டில் வைத்து சேத்தன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.

போலீஸ் விசாரணை

எனினும் தனது குடியிருப்புக்கு சென்றதும் சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குடியிருப்பு காவலாளிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவலாளி, சிலருடன் சேர்ந்து உணவு விற்பனை பிரதிநிதியை சுற்றிவளைத்து பிடித்தார். மேலும் உடனடியாக தலகட்டபுரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சேத்தனை பிடித்து விசாரணை நடத்தினர்.

போக்சோவில் கைது

அப்போது உணவு விற்பனை செய்ய வந்தபோது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சேத்தனை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com