கால்பந்து ஆட்டத்தின்போது மின்னல் தாக்கி இளைஞர் பலி

மின்னல் தாக்கியதில் 17 பேர் படுகாயமடைந்தனர்.
கால்பந்து ஆட்டத்தின்போது மின்னல் தாக்கி இளைஞர் பலி
Published on

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் கால்பந்து ஆட்டத்தின்போது மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் சார்கிராம் மாவட்டம் குமார்பந்த் கிராமத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு இடையே கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் அப்பகுதியை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

மின்னல் தாக்கி பலி

இந்நிலையில், கால்பந்து போட்டிகள் நேற்று மாலை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. இதனால், வீரர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள மரத்தின் அருகே ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இதில் தீபன் முர்மு (வயது 19) என்ற இளைஞர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 17 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com