இந்தியாவின் முதல் கருணைக் கொலை: குடும்பத்தினர் கண்ணீர் மல்க பிரியாவிடை

அவரது தந்தையின் கோரிக்கையை ஏற்று, கருணைக் கொலைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இந்தியாவின் முதல் கருணைக் கொலை: குடும்பத்தினர் கண்ணீர் மல்க பிரியாவிடை
Published on

புதுடெல்லி,

டெல்லி அருகே காசி​யா​பாத் பகு​தியை சேர்ந்​தவர் ஹரிஷ்ராணா. இவர் பஞ்​சாப் பல்​கலைக்​கழகத்​தில் பி.டெக் படித்து வந்த நிலை​யில், தங்​கி​யிருந்த விடு​தி​யின் 4-வது மாடியில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு தவறி விழுந்​தார். இதில் அவருக்கு மூளை​யில் காயம் ஏற்​பட்டு 13 ஆண்​டு​களாகப் பல்​வேறு சிகிச்​சைகள் மேற்​கொண்​டும் நினைவு திரும்​பவில்லை. இதையடுத்து அவரை கருணைக் கொலை செய்​யக் கோரி பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்​கல் செய்​தனர்.

பஞ்​சாப் பல்​கலைக்​கழக முன்​னாள் மாணவ​ரான ஹரிஷ் ராணா ‘கண்​ணி​ய​மான முறை​யில் உயி​ரிழக்​கும் உரிமை​யை' சுப்ரீம் கோர்ட்டு வழங்​கியது. இந்​தி​யா​விலேயே இத்​தகைய அனு​மதி வழங்​கப்​படு​வது இதுவே முதல் ​முறை​யாகும். இந்த நிலை​யில், ஹரிஷ் ராணா​வின் குடும்​பத்​தினர் அவரோடு கடைசி 22 நிமிடங்களை கழித்த வீடியோ வெளி​யாகி பார்ப்​போர் கண்​களை குள​மாக்கி வரு​கிறது.

காஸி​யா​பாத் நகரின் அமை​தி​யான அந்​தச் சந்​தில், அசைவற்றுப்படுத்​திருந்த ஹரிஷ் ராணா​வின் படுக்​கை​யைச் சுற்றி அமர்ந்​து, ஹரீஸை திலகமிட்டு மன்னிப்புக்கேட்டு அவரது குடும்​பத்​தினர் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யில் அவரது உயிர்காக்​கும் கருவி​கள் படிப்​படி​யாக அகற்​றப்​பட்டு வருகிறது. இளைஞருக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஹரிஷ் ராணா உயிரிழந்துவிடுவார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com