பிறந்த குழந்தைக்கு அபிநந்தன் பெயரை சூட்டிய ராஜஸ்தான் தம்பதி

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் கிஷான்கார் பாஸ் பகுதியை சேர்ந்தவர் சப்னா தேவி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் மாலை ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தைக்கு அபிநந்தன் பெயரை சூட்டிய ராஜஸ்தான் தம்பதி
Published on

ஜெய்ப்பூர்,

பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் அதே நாளில் விடுவிக்கப்பட்டார். இதனால் அபிநந்தன் பெயரையே தங்கள் குழந்தைக்கு சப்னா தேவி தம்பதி சூட்டினர்.

இது குறித்து சப்னா தேவி கூறுகையில், அபிநந்தன் எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பதை நானும், என்னுடைய குடும்பத்தினரும் தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்தோம். அப்போது தான் எனக்கு குழந்தை பிறந்தது. பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட பின்னரும் எந்த பயமும் இல்லாமல் மன உறுதியுடன் அபிநந்தன் இருந்ததால் அவருடைய பெயரை என் குழந்தைக்கு சூட்டினோம். அவரை போலவே என்னுடைய மகனும் சிறந்த வீரனாக வர விரும்புகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com