

புதுடெல்லி
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது.
வன்முறையின் போது உடனடி நடவடிக்கை எடுக்காமல், எதற்காக காத்திருக்க வேண்டும். ஏன் இந்த அளவிற்கு நிலைமையை கைமீறி போக விட்டீர்கள்.
காவல் துறையின் மெத்தனப் போக்கால் தான் பிரச்சினை பெரிதானது. டெல்லி கலவரம் துரதிருஷ்டவசமானது, வேதனை அளிக்கிறது என நீதிபதி கே.எம்.ஜோசப் காவல்துறை மீது அதிருப்தி வெளியிட்டார்.
வன்முறை தொடர்பான வழக்குக்கும், ஷாகின் பாக் போராட்டத்திற்கும் தொடர்பில்லை. வன்முறை வழக்கை டெல்லி ஐகோர்ட் விசாரித்து வருகிறது! என அரசு தரப்பு விளக்கம் அளித்தது.