தேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி - பா.ஜனதா எம்.பி. பிரக்யாவின் மற்றொரு சர்ச்சை கருத்து

தேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி என பா.ஜனதா எம்.பி.யான பிரக்யா சிங் மற்றொரு சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார்.
தேசத்தின் ’மகன்’ மகாத்மா காந்தி - பா.ஜனதா எம்.பி. பிரக்யாவின் மற்றொரு சர்ச்சை கருத்து
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதியின் பா.ஜனதா எம்.பி. பிரக்யாசிங் தாகூர். பெண் சாமியாரான இவர் அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறுவதில் பிரபலமானவர். கடந்த லோக்சபா தேர்தலின் போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கியதால் பிரக்யாசிங் தாகூருக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்நிலையில் மகாத்மா காந்தி பற்றி மற்றொரு கருத்தை கூறி பிரக்யாசிங் தாகூர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ரெயில்வே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரக்யாசிங் எம்.பி., செய்தியாளர்கள் சந்திப்பில், காந்தி இந்த தேசத்தின் மகன். அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். இந்த தேசத்துக்காக யாரெல்லாம் பாடுபட்டார்களோ அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். மகாத்மா காந்தியின் கொள்கைகளின் படி நடப்பேன். எங்களுக்கு வழிகாட்டுதல்களை கொடுத்த தலைவர்களை நிச்சயம் நாங்கள் புகழ்வோம். அவர்களது பாதையை மக்களுக்காக பின்பற்றி நடப்போம் என்று கூறினார்.

தேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியை தேசத்தின் மகன் என்று பிரக்யாசிங் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது கருத்து சுதந்திர போராட்ட இயக்கத்தின் மாபெரும் தலைவரை அவமதிப்பதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com