ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு நூதன தண்டனை

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டது.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு நூதன தண்டனை
Published on

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

ஹெல்மெட் அணியாததால் பிடிபட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஏன் ஹெல்மெட் அணியவில்லை? என்ற காரணத்தை சுருக்கமாக 100 வார்த்தைகளில் எழுதித்தருமாறு அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த தகவலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் சவுகான் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com