முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு தகுதி வாய்ந்த ராணுவ அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு

லெட்டினன்ட் ஜெனரல், ராணுவ தளபதியாக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு தகுதி வாய்ந்த ராணுவ அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளானது.

இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் முப்படைகளின் தலைமைத் தளபதியாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. இதற்கான தகுதியினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி முப்படைகளின் தலைமைத் தளபதி பதவிக்கு தகுதி வாய்ந்த ராணுவ அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. லெப்டினன்ட் ஜெனரல், ராணுவ தளபதியாக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

62 வயதுக்கு குறைவானவர்கள், ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் ராணுவ வீரர்களில் தகுதியானவரை தேர்ந்தெடுத்து முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com