இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி உள்பட 2 பேர் கைது

இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி உள்பட 2 பேரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.
இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி உள்பட 2 பேர் கைது
Published on

சிக்கமகளூரு-

இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி உள்பட 2 பேரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

இறப்பு சான்றிதழ்

சிக்கமகளூரு (மாவட்டம்) டவுன் சங்கர்புரா பகுதியை சேர்ந்தவர் தாஜ். இவரது கணவர் கடந்த மாதம் (ஜூலை) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்தநிலையில் தனது கணவரின் இறப்பு சான்றிதழ் வாங்க சிக்கமகளூரு தாலுகா அலுவலகத்தில் தாஜ் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் அதிகாரி இக்பால் என்பவரிடம் பரிசீலனைக்கு சென்றது. இந்தநிலையில் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என இக்பால், தாஜிடம் கூறினார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்றும் ரூ.5 ஆயிரம் தருகிறேன் எனவும் தாஜ் கூறியுள்ளார்.

பின்னர் லஞ்சம் கொடுக்க மனமில்லாமல் அவர் லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து லாக் அயுக்தா போலீசார் தாஜிடம் அறிவுரை கூறினர். பின்னர் ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை தாஜிடம் லோக் அயுக்தா போலீசார் கொடுத்து அனுப்பினர்.

2 பேர் கைது

இதையடுத்து தாலுகா அலுவலகத்திற்கு சென்ற தாஜி இக்பாலுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் உதவியாளர் ஜீவனிடம் பணத்தை கொடுக்கும்படி தாஜிடம் கூறியுள்ளார். இதையடுத்து தாஜி உதவியாளர் ஜீவனிடம் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்தார்.

அப்போது மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் ஜீவன், இக்பாலையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்பு அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com