காப்பி அடிப்பதாக கூறி நிர்வாணமாக்கிய ஆசிரியர் ;அவமானத்தால் தீக்குளித்த மாணவி

9ம் வகுப்பு மாணவி காப்பி அடிப்பதாக கூறி சீருடைகளை கழற்றி நிர்வாணமாக்கிய ஆசிரியரால் அவமானம் தாங்காமல் மாண்வி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
காப்பி அடிப்பதாக கூறி நிர்வாணமாக்கிய ஆசிரியர் ;அவமானத்தால் தீக்குளித்த மாணவி
Published on

ஜாம்ஷெட்பூர்

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில், தேர்வில் காப்பி அடித்ததாக கூறி சந்தேகிக்கப்பட்ட ஆசிரியர் தனது ஆடைகளை கழற்றச் செய்து நிர்வாணமாக்கியதால் மாணவி ஒருவர் தனக்கு தானே தீவைத்து கொண்டார். அவர் ௮௦ சத்வீத தீக்காயங்களுடன் மறுத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

போலீசார் வெளியிட்ட தகவல் படி

மாணவி தனது சீருடையில் மறைத்து வைத்து காகித சீட்டுகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று ஆசிரியர் சந்தேகித்து உள்ளார். இதனால் மாணவின் சீருடைகளை களைந்து நிர்வாணமாக்கி உள்ளார்.

மாணவி, தனது வாக்குமூலத்தில், ஆசிரியர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், கடுமையாக எதிர்த்த போதிலும், சீருடையில் காப்பி சீட்டுகளை மறைக்கிறாய் என என்று சோதிக்க வகுப்பறையை ஒட்டியுள்ள அறையில் தனது ஆடைகளை கழற்றச் செய்ததாக காவல்துறை அதிகாரி கூறினார்.

அந்த ஆசிரியருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பள்ளியில் இருந்து வந்த சிறிது நேரத்திலேயே அவமானம் தாங்க முடியாமல் மாணவி தீக்குளித்தார் செய்து கொண்டதாக மாணவியின் தாய் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com