

புதுடெல்லி,
டெல்லியில் பஞ்சாபி பாக் மேற்கு மெட்ரோ ரெயில் நிலையத்தில் காணப்பட்ட ஆண் பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அவரிடம் சில வெளிநாட்டு கரன்சிகள் இருந்துள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.2.7 கோடி என கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணைக்காக படையினர், அந்த நபரை அமலாக்க துறையிடம் ஒப்படைத்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.