இந்திய ரிசர்வ் வங்கி வசம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு 54,700 கோடி டாலராக உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கி வசம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு 2-வது வாரமாக அதிகரித்து 54,700 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வசம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு 54,700 கோடி டாலராக உயர்வு
Published on

புதுடெல்லி,

அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால், இந்தியாவில் இருந்து அமெரிக்க கடன் பத்திரங்களுக்கு சர்வதேச முதலீடுகள் மாறின. இதன் விளைவாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அக்டோபர் மாதத்தில் 83 ரூபாய் வரை சரிந்தது.

அன்னிய செலாவணி கையிருப்பு பிப்ரவரி மாதம் 63 ஆயிரத்து 100 கோடி டாலராக இருந்த நிலையில், அக்டோபர் 21-ந்தேதி நிலவரப்படி 52 ஆயிரத்து 400 கோடி டாலராக சரிந்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் வட்டி விகித அதிகர்ப்பு மட்டுப்பட்டுள்ளதால், கடந்த 2 வாரங்களாக அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு சர்வதேச முதலீடுகள் மாறி வருகின்றன. இதன் காரணமாக அன்னிய செலாவணி கையிருப்பு நவம்பர் 11-ந்தேதியன்று 54 ஆயிரத்து 400 கோடி டாலராக அதிகரித்தது.

தொடர்ந்து நவம்பர் 18-ந்தேதி நிலவரப்படி 54 ஆயிரத்து 700 கோடி டாலராக மேலும் அதிகரித்துள்ளது. அதே சமயம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 81.67 ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com