

புதுடெல்லி,
அமெரிக்க இந்தோ-பசிபிக் கடற்படை தளபதி ஜான் அகிலினோ, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. டெல்லியில் நேற்று அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
இந்தோ-பசிபிக் பிராந்திய நிகழ்வுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து பேசிய கடற்படை தளபதி ஜான் அகிலினோ, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் நட்பு நாடுகள் எங்களது மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. இந்தியவுடனான எங்கள் உறவு சீரமைக்கப்பட்ட மதிப்புகள் மற்றும் நீடித்த கூட்டாண்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒற்றுமையாக இருக்கும் போது நமது வலிமை அதிகரிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.