

புதுடெல்லி,
வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். தனது அமெரிக்க பயணத்தின் போது டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளை சந்திக்கும் கோகலே, வெளியுறவுக்கொள்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை செயலரின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மார்ச் 11 முதல் 13 ஆம் தேதி வரை கோகலே அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார். இரு தரப்பு நலன்கள் குறித்து, இருநாடுகள் இடையே நடைபெறும் வழக்கமான உயர்மட்ட குழு ஆலோசனைதான் எனவும் வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.