வனத்துறை அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை: ரூ. 7.60 கோடி மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல்

வருமானத்திற்கு அதிகமாக 228 மடங்கு சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது.
வனத்துறை அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை: ரூ. 7.60 கோடி மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல்
Published on: 

போபால்,

வனத்துறை அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ. 7.60 கோடி மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வனத்துறை அதிகாரி

மத்தியபிரதேச மாநிலம் பட்ச்மர்ஹி பகுதியில் உள்ள சட்புரா புலிகள் காப்பகத்தில் வனத்துறை உதவி இயக்குனராக செயல்பட்டு வருபவர் சஞ்சீவ் குமார். இவரும் அவரது மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக லோக் ஆயுக்தா அமைப்புக்கு புகார்கள் வந்தன.

ரூ. 7.80 கோடி பறிமுதல்

இந்த புகார்கள் அடிப்படையில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று பட்ச்மர்ஹி பகுதியில் உள்ள சஞ்சீவ் குமாரின் வீடு, அரசு குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து 2.5 கிலோ தங்கம், 1.6 கிலோ வெள்ளி, பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, பணம், சொத்து ஆவணங்களின் மொத்த மதிப்பு 7.60 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சொத்துகளை சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி சட்டவிரோதமாக சேர்த்தது தெரியவந்துள்ளது. சஞ்சீவ் தனது வருமானத்திற்கு அதிகமாக 228 மடங்கு சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. இது குறித்து சஞ்சீவ் குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X