முன்னாள் ராணுவ தலைமை தளபதி காலமானார்

1950ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் பின்னர் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
முன்னாள் ராணுவ தலைமை தளபதி காலமானார்
Published on

டெல்லி,

முன்னாள் ராணுவ தலைமை தளபதி விஸ்வநாத் சர்மா இன்று காலமானார்

1988ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றியவர் விஸ்வநாத் சர்மா (வயது 96). 1950ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் பின்னர் பல்வேறு பொறுப்புகளை வகித்து 1988ம் ஆண்டு ராணுவத்தின் தலைமை தளபதியாக பதவி உயர்வு பெற்றார்.

1965ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரின்போது இவர் லாகூர் செக்டார் பிரிவின் ராணுவ மேஜராகவும் பணியாற்றியுள்ளார். ராணுவத்தில் இவரது வீரதீர செயல்களை பாராட்டி விஸ்வநாத் சர்மாவுக்கு பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டன. இதையடுத்து அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

விஸ்வநாத் சர்மா காலமானார்

இந்நிலையில், 96 வயதான முன்னாள் ராணுவ தலைமை தளபதி விஸ்வநாத் சர்மா இன்று காலமானார். வயது முதிர்வு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஸ்வநாத் சர்மா இன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com