உத்தரகாண்ட்: தலைமைச் செயலகம் முன்பு முன்னாள் முதல்-மந்திரி தர்ணா

உத்தரகாண்டில் தலைமைச் செயலகம் முன்பு முன்னாள் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
உத்தரகாண்ட்: தலைமைச் செயலகம் முன்பு முன்னாள் முதல்-மந்திரி தர்ணா
Published on

டோராடூன்,

உத்தரகாண்ட் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் கட்சித் தொண்டர்களுடன் டோராடூனில் உள்ள மாநில தலைமைச் செயலகம் முன்பு இன்று தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் வீடுகள், பயிர்கள் உள்பட பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஹரிஷ் ராவத் மாநில தலைமைச்செயலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com