பா.ஜ.க-வில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

Image Courtesy: X (Twitter) / File Image
கேதர் ஜாதவ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களை சந்திப்பார் என சந்திரசேகர் பவன்குலே கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் (வயது 40). இவர் இந்திய அணிக்காக 73 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், ஐ.பி.எல்.போட்டிகளிலும் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு அனைத்து கிரிக்கெட்டுகளில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக அப்போதே தகவல் வெளியாகி இருந்தது.
இந்தநிலையில் மும்பையில் நேற்று நடந்த விழாவில் கேதர் ஜாதவ், மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதுபற்றி சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், "கேதர் ஜாதவ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களை சந்திப்பார். மேலும் மாநிலத்தில் பா.ஜ.க-வின் விளையாட்டுப்பிரிவை வலுப்படுத்த அவர் உதவுவார்" என்றார்.
பா.ஜ.க-வில் இணைந்த கேதர் ஜாதவுக்கு கட்சியில் என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.






