டெல்லி முன்னாள் முதல் மந்திரி மதன்லால் குரானா உடல்நல குறைவால் மரணம்

டெல்லி முன்னாள் முதல் மந்திரி மதன் லால் குரானா உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.
டெல்லி முன்னாள் முதல் மந்திரி மதன்லால் குரானா உடல்நல குறைவால் மரணம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 1993ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதல் மந்திரியாக இருந்தவர் மதன் லால் குரானா (வயது 82). மூத்த பா.ஜ.க. தலைவரான இவர் கடந்த 2004ம் ஆண்டு ராஜஸ்தானின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக நெஞ்சு வலி மற்றும் காய்ச்சலால் இவர் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை உடல்நிலை மோசமடைந்தது.

கடந்த 5 வருடங்களாக மூளை ரத்த கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு அவர் மரணமடைந்து உள்ளார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த மாதம் மற்றொரு மகன் மரணமடைந்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com