டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குனர் விருப்ப ஓய்வு பெற்றார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் இயக்குனர் விருப்ப ஓய்வு பெற்றார்
Published on

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனராக பணியாற்றியவர் டாக்டர் ரன்தீப் குலேரியா. நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, மத்திய அரசின் கொரோனா பொறுப்பு குழுவுக்கு தலைமையேற்று நடத்தி, முக்கிய பணியாற்றியவர்.

கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் வழிகாட்டியதில் பெரும் பங்கு வகித்தவர்.

30-க்கும் கூடுதலான ஆண்டுகள் எய்ம்சில் சேவையாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது பதவி காலம் கடந்த செப்டம்பர் 23-ந்தேதி முடிந்த பின்னர், அவர் விருப்பு ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளார்.

வருகிற 2024-ம் ஆண்டு ஏப்ரல் வரை அவரது பதவி காலம் உயர்த்துவதற்கான சூழல் இருந்தபோது இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் பதவிக்கு 2017-ம் ஆண்டு மார்ச்சில் பொறுப்பு ஏற்று கொண்ட அவர், கடந்த மார்ச் மாதத்தில் பதவி காலம் முடிவடைய இருந்த சூழலில் இரண்டு முறை அவரது பணி நீட்டிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com