மத்திய பிரதேசத்தில் ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி பா.ஜ.க.வில் இணைந்தார்
ஓய்வு பெற்ற 3 மாதத்தில் ரோகித் ஆர்யா பாஜகவில் இணைந்துள்ளது மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போபால்,
மத்திய பிரதேச ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர் ரோகித் ஆர்யா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தநிலையில் போபாலில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் மாநில பாஜக பொறுப்பாளர் ராகவேந்திர சர்மா முன்னிலையில் ரோகித் ஆர்யா அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ரோகித் ஆர்யா கடந்த 2003ம் ஆண்டு ஐகோர்ட்டு மூத்த வக்கீலாக பணியாற்றினார். 2013ம் ஆண்டு ஐகோர்ட்டு நீதிபதியாகவும், 2015-ம் ஆண்டு மத்திய பிரதேச ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றினார். ஓய்வு பெற்ற 3 மாதத்தில் ரோகித் ஆர்யா பாஜகவில் இணைந்துள்ளது மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story