ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண்குமார் சாமி தரிசனம்

கோவிலுக்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண்குமார் சாமி தரிசனம்
Published on

ஸ்ரீகாளஹஸ்தி,

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண்குமார் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவரை அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.

கோவிலுக்குள் சென்றவர் மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். சாமி படம், பிரசாதம் வழங்கப்பட்டது.

சாமி தரிசனத்தின்போது கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com