ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஷிபு சோரன் உடல்நிலை கவலைக்கிடம்

கோப்புப்படம்
ஷிபு சோரன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதுடெல்லி,
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஷிபு சோரன் (81 வயது) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 24-ந்தேதி டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஷிபு சோரனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஷிபு சோரன் மத்திய நிலக்கரித்துறை மந்திரியாகவும், மூன்று முறை ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார். தற்போது அவரது மகன் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
Related Tags :
Next Story






